Friday, December 23, 2011

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
எனது கையென்னை அடிப்பதுவோ எனது விரல் கண்ணைக் கெடுப்பதுவோ
அழுது அறியாத என் கண்கள் ஆறு குளமாக மாறுவதோ
ஏனென்று கேட்கவும் நாதியில்லை ஏழையின் நீதிக்குக் கண்ணுண்டு பார்வையில்லை
பசுவினைப் பாம்பென்று சாட்சிசொல்ல முடியும் காம்பினில் விஷம் என்ன கறக்கவா முடியும் (2)
உடம்பில் வழிந்தோடும் உதிரம் உனைக்கேட்கும்
நான் செய்த தீங்கு என்ன
(2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
வந்து விழுகின்ற மழைத்துளிகள் எந்த இடம் சேரும் யார் கண்டார்
மனிதர் கொண்டாடும் உறவுகளோ எந்த மனம் சேரும் யார் கண்டார்
மலைதனில் தோன்றுது கங்கை நதி அது கடல் சென்று சேர்வது காலன் விதி
இவனுக்கு இவள் என்று எழுதிய கணக்கு கணக்குகள் புரியாமல் கனவுக்குள் வழக்கு (2)
உறவின் மாறாட்டம் உரிமைப் போராட்டம்
இரண்டும் தீர்வதெப்போ
(2)

விடுகதையா இந்த வாழ்க்கை விடைதருவார் யாரோ
உனது ராஜங்கம் இதுதானே ஒதுங்கக்கூடாது நல்லவனே
தொண்டுகள் செய்ய நீயிருந்தால் தொல்லை நேராது தூயவனே
கைகளில் பொன்னள்ளி நீ கொடுத்தாய் இன்று கண்களில் கண்ணீரை ஏன் கொடுத்தாய்
காவியங்கள் உனைப்பாடக் காத்திருக்கும்பொழுது காவியுடை நீ கொண்டால் என்னவாகும் மனது (2)
வாழ்வை நீ தேடி வடக்கே நீ போனால்
நாங்கள் பூவதேங்கு (2)

இந்த படமும் இந்த பாடலும் எனக்கு மிகவும் பிடிக்கும். தனிமையில் இருக்கும் பொழுது இந்த பாடலை கேட்டால் ,அர்த்தத்தின் ஆழம் புரியும்.விடைகள் கிடைப்பது சரமம் என்றும் புரியும்.

1 comment:

cm chap said...

Yes a lovely one.. I can distinctly recollect that voice...